ஆபிரிக்காவில் இருந்து வந்த ஒரே குழுவினர் தான் நவீன மனிதர்கள்!

Friday, September 23rd, 2016

ஆபிரிக்காவில் இருந்து இடம்பெற்ற ஒரு புலம்பெயர்வே உலகெங்கும் நவீன மனிதன் பரவுவதற்கு காரணமானதாக புதிய ஆய்வொன்று கணித்துள்ளது.

ஆபிரிக்காவுக்கு வெளியில் தற்போது வாழும் மனிதர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

புதிய ஆய்வின்படி ஆரம்ப கால மனிதனின் இடம்பெயர்வு குறித்த கணிப்பில் சுமார் 500 மனித மரபணுத் தொகுதிகளையே அது காட்டுகிறது. ஆபிரிக்காவில் இருந்து பல குழுக்களாக ஆரம்பகால மனிதர்கள் இடம்பெயர்ந்ததாக கணிப்புகள் கூறும் நிலையிலேயே இந்த புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.இதன்மூலம் ஆபிரிக்காவில் இருந்து ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஹோமோசேபியன்கள் அழிவுக்கு உள்ளாகி இருப்பதாக நம்பப்படுகிறது.

ஜெர்னல் நேச்சர் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் மனிதனின் தோற்றத்தின் பின், நவீன மனிதன் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து ஊடாக அரேபிய தீபகற்பத்தை அடைந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

coltkn-09-23-fr-02170930544_4793257_22092016_mss_cmy

Related posts: