இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் மண்டையோடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Friday, July 12th, 2019

நவீன கால மனிதர்களின் மண்டையோடுகளுடன் ஒத்த சுமார் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனொருவரின் மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டில் கிரேகத்தின் எபிடிமா குகையில் இருந்து மீட்கப்பட்ட இந்த மண்டையோடு தொடர்பான துல்லியமான தகவல்கள் இந்த வருடமே கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மண்டையோடு இன்றைய யுக மனிதனின் மண்டையோட்டை ஒத்ததாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆகவே பல யுகங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனிடம் இன்றைய யுக்திகள் காணப்பட்டிருக்க கூடும் என யூகிக்கப்படுகின்றது.