8 ரிச்டர் அளவில் அடுத்த வாரம் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – கொழும்பு நகர் பாதிக்கும் வாய்ப்பும் அதிகம்!

Saturday, February 25th, 2023

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமென, புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த வாரத்தில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக, இந்திய புவிச்சரிதவியல் ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை நிச்சயம் பாதிக்குமென்று கூறிய பேராசிரியர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிமாச்சல் பகுதிக்கு அருகில் 5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும், பேராசிரியர் அத்துல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: