5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 28th, 2021

நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது.

சமுர்த்தி பயனாளிகள் தவிர்ந்த ஏனையோருக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும்போது, முழுமையாக வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பெரும்பாலான மக்கள் தமக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு விரைவில் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts:

உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில...
வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் - துறைசார் அ...