50 சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி திறப்பு!

Wednesday, March 22nd, 2017

நாடு முழுவதிலும் 50 ச.தொ.ச விற்பனை நிலையங்களை திறந்துவைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர் மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 28ஆம் திகதி நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரேநாளில் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.சதொச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணினி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்றுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: