44 பேருக்கு வெற்றிடம்: உயர் கல்வி அமைச்சு கண்டுகொள்ளவில்லை – கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி குற்றச்சாட்டு!

கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் பதிவாளர் தொடக்கம் சிற்றூழியர் வரையில் 44 வெற்றிடங்கள் நிலவுகின்றன. பெரும் இக்கட்டுநிலையிலேயே கல்லூரி இயங்குகிறது. உயர் கல்வி அமைச்சுக்கு அறிவித்தும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.
கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கான ஆளணி, சுகாதாரத் தொழிலாளர்கள், ஏனைய பணிகளுக்கான வேலையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு வெற்றிடங்கள் நீடிக்கின்றன. இக்கட்டான நிலையிலேயே கல்லூரியை நாம் நடத்தி வருகிறோம். உயர் கல்வி அமைச்சுக்கு இவை தொடர்பில் அறிவித்திருந்தோம். இன்னும் நியமனங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Related posts:
வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!
தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான கருத்திட்டத்திற்கு 4 மில்லியன் நிதியை வழங்க கொரியா சர்வதே...
|
|