4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Wednesday, September 8th, 2021

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேற்கண்ட மூன்று நாடுகளிலும் 4 ஆம் நிலையில் இருப்பதனால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் மூன்றாம் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்கள் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை முதலாம் நிலையில் இருந்த அவுஸ்ரேலியா இரண்டாம் நிலைக்கு கொண்டவரப்பட்டு அமெரிக்காவின் பயண ஆலோசனை மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

Related posts: