30 சட்டத்தரணிகளை புதிதாக சேவையில் இணைக்க முயற்சி!

Monday, October 9th, 2017

சட்ட மா அதிபர் திணைக்களம் புதிதாக 30 சட்டத்தரணிகளை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இவ்வாறு புதிதாக 300 சட்டத்தரணிகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நாடாளுமன்றின் நீதிமன்ற விவகார செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, 100 வழக்குகளுக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தாது கிடப்பில் போடப்பட்டிருக்கும் உயர் நீதிமன்றங்களில் இந்த சட்டத்தரணிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஒவ்வொரு உயர் நீதிமன்றிற்கும் தலா இரண்டு சட்டத்தரணிகள் என்ற ரீதியில் கடமையில் அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு போதியளவு அரச தரப்பு சட்டத்தரணிகள் இல்லாமையே பிரதான காரணமாக அமைந்துள்ளது என நீதி அமைச்சு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: