27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 3 மாத காலங்களுக்கு நடைமுறையிலிருக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தண அறிவிப்பு!

Friday, February 5th, 2021

வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் சிகப்பு அரிசி 1kg 106 ரூபாவிலிருந்து 93 ரூபாவாகவும் –  வெள்ளை பச்சரிசி 1kg 105 ரூபாவிலிருந்து 93 ரூபாவாகவும் நாட்டரிசி 1kg 109 ரூபாவிலிருந்து 96 ரூபாவாகவும் சம்பா 1kg 120 ரூபாவிலிருந்து 99 ரூபாவுக்கும் கீரி சம்பா 1kg 140 ரூபாவிலிருந்து 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்து.

அதேபோல கோதுமை மா 1kg 84 ரூபாவாகவும் வௌ்ளை சீனி 1kg 99 வுக்கும் சிகப்பு சீனி 1kg : 125 ரூபாவாகவும் தேயிலை 100g 95 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது

அத்துடன் அவுஸ்திரேலிய பருப்பு 1kg 165 ரூபாவாகவும்  இந்திய பெரிய வெங்காயம் 1kg : 120 ரூபாவாகவும் உருளைக்கிழங்கு உள்நாடு 1kg 180 ரூபாவுக்கும் உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg 190 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. கடலை 1kg 225 ரூபாவாகவும் – காய்ந்த மிளகாய் 1kg : 495 ரூபாவாகவும் ரின் மீன் உள்நாடு 425g 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் 425g 265 ரூபாவுக்கும் நெத்தலி தாய்லாந்து 1kg 545 ரூபாவுக்கும் தோலுடன் கூடிய கோழி 1kg 400 ரூபாவுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கட்டி உப்பு 1kg : 43 ரூபா பால்மா 400g : 355 ரூபா சோயா எண்ணை 500ml 310 ரூபா சவர்க்காரம் 115g : 43 ரூபா – சவர்க்காரம் 650g : 260 ரூபா – வாசனை சவர்க்காரம் 100g : 56 ரூபா கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : 250 ரூபா – முகக்கவசம் SLS தரச் சான்றிதழுடன் கூடியது 14 ரூபா எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: