2025ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் –  அமைச்சர் சஜித் பிரேமதாச!

Thursday, April 27th, 2017

காணிகளும், வீடுகளும் அற்றவர்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாக 2025 ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக என்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

வீடு இல்லாத மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான இத்திட்டத்தில் நன்கொடையாளர்களையும், வர்த்தகர்களையும் இணைந்து கொள்ளுமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார். தேசிய பணியின் பங்குதாரர்களாக மாறும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: