எதிர்வரும் நாட்கள் மிகவும் அவதானமிக்கவை: மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சு !

Friday, October 30th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்வரும் நாட்கள் மிகவும் அவதானமிக்கவையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் மேலும் கூறியுள்ளதாவது –  “கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில், பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்கள் சில செயலிழந்து காணப்படுகின்றன. ஆகவே, குறித்த  பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்களை மீண்டும் செயற்படுத்துவதற்காக சீன விசேட வல்லுனர்கள் இன்று இலங்கை வரவுள்ளனர் என தெரிவித்துள்ள அவர்  தனிமைப்படுத்தல் என்பது சிறை வாழ்க்கை அல்ல. அது இந்த சமூகத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்படும்  ஒரு விசேட செயன்முறை என்பதை அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்  எனவும் அவர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது

Related posts:

திருக்கேதீச்சர சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது - யாழ்ப்பாணம் மறைமாவட்டம் குரு முதல்வர்!
வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூ...
பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் தொடர்பில் இவ்வாரம் வெளியாகும் - பல்கலைக்கழக மானியங்க...