2021 ஆம் ஆண்டில் வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் பலி – 13 ஆயிரத்து 469 பேர் காயம் – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவிப்பு!

Friday, December 31st, 2021

இன்றுடன் முடிவடையும் 2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலத்தில் நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிமுதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களை அடிப்படையாக கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தக்காலப் பகுதியில் நாடு முழுவதும் நடந்த கோர விபத்துக்களில் 2 ஆயிரத்து 325 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 697 பேர் பாதசாரிகள். 901 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் என்பதுடன் 152 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் 2021 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்களில் 13 ஆயிரத்து 469 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 5 ஆயிரத்து 263 பேர் படுகாயமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 216 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: