2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று (23) ஆரம்பமாகியுள்ள குழுநிலை விவாதம் எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரதத்தில் மோதுண்டு மாலைத்தீவு பிரஜையொருவர் பலி.!
35 கோடி ரூபா செலவில் காலியில் மீன்பிடித்துறைமுகம்!
மரண தண்டனை விவகாரம்: ஐ.நா செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!
|
|