20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 9th, 2020

வரவுள்ள 20ஆவது அரசியல் திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உத்தேச 20ஆவது திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தம் நகல்வடிவிலேயே உள்ளதால் மேலதிக பிரிவுகளை இணைக்கலாம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20ஆவது திருத்தத்தின் நகல்வடிவில் உள்ள விடயங்கள் தேர்தல்கள் இடம்பெற்றதால் தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை கொண்ட குழுவே உறுப்பினர்களை நியமித்தது என குறிப்பிட்டுள்ள மஞ்சுள கஜயநாயக்க 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி உறுப்பினர்களை நியமிப்பார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

20ஆவது திருத்தத்தின் காரணமாக உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரம் குறையும் எனவும் தெரிவித்துள்ள அவர் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான நோக்கம் தோற்கடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: