20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் விசேட அறிக்கை!
Monday, September 14th, 202020 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நாளையதினம் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 9 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
இந்த நிலையில், குறித்த குழுவினரின் அறிக்கை நாளையதினம் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்!
‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
ஏப்ரல் இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளர்த்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர்!
|
|