2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் மன்னாரில் ஒருவர் கைது!

Monday, January 15th, 2018

மன்னார் எருக்கலம்பிட்டி பேரூந்து தரிப்பிட நிலையத்தில் சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு   பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நவரத்தினவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்; மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் குறித்த கேரள கஞ்சா பொதியை கைப்பற்றியதோடு,  அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

2 கிலோ 55 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதி சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரில் இருந்து   அநுராதபுரம் தலாவ என்னும் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல இருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: