16ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு!

Thursday, September 12th, 2019

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாக தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு குறித்த ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று(11) அறிவித்துள்ளது.

விவசாய அமைச்சின் கட்டடமொன்றைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: