13 வது திருத்தம் மீளாய்வு செய்யவேண்டும் – தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல !

Tuesday, September 15th, 2020

ஸ13 ஆவது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தெரிவிப்பது வழமை. ஆனால் இனிமேல் அவர்கள் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மிகச் சிறிய எண்ணிக்கையிலானவர்களே இனப்பிரச்சினை குறித்து பேசுகின்றனர் பொருளாதார தீர்வுகளே தேவையாக காணப்படுகின்றன. வடக்கு கிழக்கிலிருந்து சமீபத்தைய தேர்தல்கள் மூலம் 11 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் தமது நீர்ப்பாசனம் மீண்டும் கிடைக்கவேண்டும் என விரும்புகின்றனர் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு உத்தரவாதத்தை விரும்புகின்றனர் உறுதியான கல்விமுறை மற்றும் சமூகங்களுடன் ஆரோக்கியமான உறவுகளை விரும்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்

இது பல தடவை மீறப்பட்டுள்ளது கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒற்றுமையின்மையை ஊக்குவிக்கின்றனர், ஆனால் மக்கள் ஏனைய சமூங்களுடன் ஐக்கியத்துடன் வாழ விரும்புகின்றனர் என நான் நிச்சயமாக நம்புகின்றேன் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இது சிலருக்கு அரசியல் ரீதியிலான தேவை எனவும் குறிப்பிட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின்பிரதிநிதிகள் என தெரிவிப்பதுவழமை ஆனால்இனிமேல் அவர்கள் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 13ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் 1986 முதல் நாங்கள் பொலிஸ் காணி அதிகாரம் குறித்து பேசுகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா 13 ஆவது திருத்தம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து, அந்த தருணத்தில் அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து விடுபட முயன்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: