உர நெருக்கடியால் சீனா – இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது – இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021

இரு அரசாங்க ஆய்வுகூடங்களின் முரண்பட்ட கருத்துக்கள் சீன – இலங்கை உறவுகளில் வேதனையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரான ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை உரிய முறையில் வழங்க முடியாமல் போனது.

இதற்காக இறக்குமதி செய்யப்பட்ட ‘ஹிப்போ ஸ்பிரிட்’ என்ற சேதன உரம் கொண்ட கப்பல் 70 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இரு ஆய்வகங்கள் சீன அரசாங்கத்தை வேதனைப்படுத்தும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெரும் பருவத்திற்கு 500 மில்லி நானோ நைட்ரஜன் 1.8 மில்லியன் போத்தல்கள் தேவைப்பட்ட போதிலும், 189,000 போத்தல்களே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அரசாங்கம் 100,000 போத்தல்களுக்கு மாத்திரமே செலுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நெருக்கடியை வேண்டுமென்றே உருவாக்கி அரசாங்கம் திருடுவதாக சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: