13 ஆவது கொரோனா மரணம் பதிவானது இலங்கையில்!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கண் வில்லைகளின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு முயற்சி!
நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் - ஜனாதிபதி செயலணியின் த...
வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி!
|
|