13இலட்சத்து 80ஆயிரம் ரூபா காசோலை மோசடி நபர் கைது!
Monday, November 28th, 2016அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் உள்ள மரக்கறி வியாபாரியின் 13லட்சத்து 80ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை மோசடி செய்த சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கைதானவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20வயதடைய நபர் என்று பொலிஸார் கூறினார்.
அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மரக்கறி வியாபாரி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்துகொண்ட முறைப்பாட்டுக்கு அமையச் சந்தேக நபைரைப் பொலிஸார் கைது செய்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தம்புள்ள மத்திய பொருளாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மரக்கறி வியாபார நிலையத்தில் இந்த வியாபாரி மரக்கறிகளை கொள்வனவு செய்வது வழக்கம். அதற்காக யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை உதவியாளராக வைத்திருந்தார். இந்த நிலையில் தம்புள்ளவில் அமைந்துள்ள வர்த்தகருக்கு குறித்த பெறுமதியுடைய காசோலையை வழங்கிவிட்டு வருமாறு முதலாளியான மரக்கறி வியாபாரி, உதவியாளரை வைத்திருந்தார். அந்தக் கோசோலையை தனது பெயருக்கு மாற்றிய உதவியாளரான வபர், நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டமை வங்கி பணப்பரிமாற்றம் மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முதலாளியால், உதவியாளருக்கு எதிராக அச்சுவேலி பொலிஸ’ நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைய மொசடியில் ஈடுபட்ட சபரை அச்சுவேலி பொலிஸார் சைது செய்திருந்தனர்.பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|