12 பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மொழிப் பயிற்சியில் பங்கேற்பு!
Sunday, August 13th, 2017நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் மொழிப் பயிற்சி வகுப்பிற்கு 12 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பளார் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் கவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், நேற்றைய அறிமுக நிகழ்வுக்கு 12 உறுப்பினர்களே கலந்து கொண்டிருந்தனர்.
விசேட பயிற்சிகளுடன் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த மொழிப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வரமும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெறும். தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிங்களம் மற்றும் தமிழ்மொழி வளவாளர்களால் மேற்படி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|