தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அதிக தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை!

Tuesday, August 10th, 2021

நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஐந்தாவது நாளும் 2 ஆயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கடந்த நான்கு நாட்களாக 90 ஐ தாண்டியிருந்த நிலையில் நேற்றையதினம் அது 100 கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளர்.

அதனடிப்படையில் எதிர்வரும் 14 நாட்களில் கொரோனா தொற்றார்கள் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் என்பதால் சுகாதாரப் பிரிவுக்கும் மற்றும் வைத்தியசாலைக்கும் கொரோனா தொற்றாளர்களின் கொள்ளளவை கட்டுப்படுத்த மிகவும் கடுமையாகச் செயற்படவேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார நடவடிக்கைகளுக்காக முன்னெடுத்துச் செல்லும் சகல செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் எல்லோரும் ஒன்றுகூடும் இடங்களை முற்றாகத் தடுக்க வேண்டும் என்றும் அத்தியாவசியம் இல்லாமல் நிறுவனங்களில் ஊழியர்களைச் சேவையில் அமர்த்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட ரீதியாகவும் மாகாணங்கள் ரீதியாகவும் பயணக் கட்டுபாடுகளை விரைவாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர் நிறுவனங்களில் அத்தியாவசியம் இல்லாமல் வருகை தருவோரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல உயிர்கள் பலியாகலாம் என்றும் சுட்டிக்காட்யுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் இதனைத் தவிர்க்க சகலரும் ஒத்துழைப்புடன் செய்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: