தொடருந்து சேவைகள் முழுமையாக பாதிப்பு!

Thursday, September 26th, 2019


வேதன பிரச்சினையை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொடருந்து தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக, தொடருந்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தொடருந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக, இன்று காலை முதல் 174 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், 6 அலுவலக தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கண்டி, அவிசாவளை, குருநாகல், மஹவ, சிலாபம் மற்றும் காலி முதலான பகுதிகளிலிருந்து, இன்று காலை தொடருந்து சேவைகள் இடம்பெற்றதாக தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அநுர ப்ரேமரட்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பு – கோட்டையிலிருந்து எந்தவொரு தொடருந்தும் சேவையில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்..

Related posts: