தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – மனைவி, நண்பர்கள் மீது தாய் சந்தேகம்..!

Saturday, September 21st, 2019


யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.

இந் நிலையில், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான திருநாவுக்கரசு சூரியகுமார் என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சூரியகுமாரின் வீட்டிற்கு மதுபோதையில் சென்றுள்ளனா்.

அதன்பின்னர் அங்கு உணவருந்திவிட்டு இரவு 11.30 மணியளவில் மூவரும் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளனர்.

மனைவியும் சிறு பிள்ளைகளும் வீட்டின் உள்ளே படுத்துறங்கியுள்ள நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் சத்தம் கேட்டு மனைவி வெளியே சென்று பார்த்தபோது நெருப்பில் எரிந்த நிலையில் இருந்த கணவரை கிணற்றடியில் வைத்து நண்பர்கள் இருவரும் குளிப்பாட்டியுள்ளனர்.

இதனையடுத்து 27ம் திகதி அதிகாலை குறித்த குடும்பஸ்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கணவருடன் இருந்த இரு நண்பர்கள் மீதும் தனக்கு சந்தேகம் உள்ள தெரிவித்த உயிரிழந்த நபரின் மனைவி, நுளம்புத் திரியில் எரிந்து காயம் ஏற்பட்டதாக கணவர் தெரிவித்த்தாகவும் ஆனால் , தமது வீட்டில் அப்போது நுளம்புத் திரியே கிடையாது எனவும் கூறியுள்ளார்.

இது இவ்வாற்றிருக்க சம்பவம் இடம்பெற்ற தினம் தனது மகனுடன் இருந்த இரு நண்பர்கள் மீதும் வீட்டில் இருந்த தனது மருமகளின் மீதுமே தான் சந்தேகப்படுவதாக உயிரிழந்தவரின் தாயார் கூறியிருக்கின்றார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதாக தெரியவருகின்றது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: