தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் – கோத்தாபய ராஜபக்ச!

Monday, August 12th, 2019


வடக்கு மக்களின் அபிலாசைகள் ,விசேடமான எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக தமக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளதாகவும், அவர்களின் பிரச்சனைகளையும் அபிலாசைகளையும் தமது அரசாங்கத்தில் உறுதியாக தீர்த்து வைப்பேன் எனவும் கோத்தாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், உரையாற்றும்போதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

அத்துடன் 2500 வருடங்கள் பழைமையாக வரலாற்றை கொண்ட எமது நாட்டில் பல இனத்தவர் வாழ்கிறார்கள் என்றும், எப்பொழுதும் நாம் ஒவ்வொருவரினது சமயத்திற்கு கொளரவமளித்து, ஒவ்வொருவரினது கலாச்சார விழுமியங்களிற்கு மதிப்பளித்து நட்புறவுடன் வாழ்ந்த இனமாகும் எனவும், எமது பலமாக அந்த ஒற்றுமை எப்பொழுதும் இருக்க வேண்டுமெனவும் கோத்தாபய ராஜபக்ச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார் .


காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது மக்கள் அதிருப்தி - ஜனாதிபதி!
தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமைஅமையாமையேகாரணமாகும் அனைத்துத் தமிழ்க்...
இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி அறிமுகம்!
இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐக்கிய நாடுகள் சபை!
தெற்காசியாவின் அதிசயம் முழுமை அடைந்தது!