ஜனாதிபதி வேட்பாளர் ஒருபோதும் மாற்றப்படாது – மஹிந்த !

Saturday, August 31st, 2019


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது ஜனாதிபதி வேட்பாளரை தாம் ஒருபோதும் மாற்றப்போவதில்லையென பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிச்சயம் ஆதரவு வழங்கும் என்றும் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவே இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் அறிவிக்கவில்லை எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணையாது என்றும் இருப்பினும் தேர்தலின்போது இரு கட்சிகளையும் அடையாளம் கண்டு, ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைவதற்கான ஒப்பந்தமொன்றினை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது கட்சி தொடர்பில் மக்களுக்கு பாரிய நம்பிக்கை இருப்பதாகவும், அதனை இன்னும் பலப்படுத்தி, கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் சகல தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்றும் மகிந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை அறிவித்துள்ளமை கண்துடைப்பென்றும் பெரமுனவின் உண்மையான வேட்பாளர் சிரந்தி ராஜபக்ஷவே என்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: