இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tuesday, August 27th, 2019


மாவனெல்லை –  முருத்தவெல பகுதியில் கைது செய்யப்பட்ட ரசீட் அக்பர் என்ற நபர், இலங்கை ஜமாதே மிலாதே இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்று உறுதியாகியுள்ளது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் படி, அவர் பல்வேறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் அவர் மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஒத்தழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பிரினால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

Related posts: