ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐவரடங்கிய குழு!

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நாளை(07) நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளார்.
குறித்த குழு, ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து, அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்று பரிந்துரைகளை முன்வைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
Related posts:
பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஜனாதிபதி!
சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்கத்திற்கான சட்ட ரீதியான தடைகள் நீக்கம்!
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி உறுதிமொழி – கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கை வருகிறது விசேட விமானம...
|
|