ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Friday, October 6th, 2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று(06) அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்ட போதே இவ்வாறு தீர்மானித்துள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர்  ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது’ எனவும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: