சஜித் பிரேமதாசாவின் போலி வாக்குறுதியால் இருந்த குடிசைகளையும் இழந்து பரிதவிக்கின்றோம் – தீர்வு கோரி வடக்கின் ஆளுநரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 2nd, 2021

கடந்த ஆட்சிக் காலத்தில வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்தபோது அவரது தேர்தல் நலனுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த காலப்பகுதியில் தமது தேர்தல் அரசியலுக்காக சஜித் பிரேமதாச அவசர அவசரமாக மக்களுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்கி வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

சஜித் பிரேமதாசவின் வாக்குறுதியை நம்பிய வறிய மக்கள் குறித்த வீட்டுத் திட்டத்தை தமக்கு கிடைக்கும் வரப்பிரசாதமாக எண்ணி நம்பிக்கையுடன் பெற்றுக்கொண்டனர்.

இது போராட்ட காரர்கள் தெரிவிக்கையில் – சஜித் பிரேமதாசவின் உத்தரவில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக வழங்கப்பட்ட ஒரு சிறு நிதி உதவியுடன் துறைசார் அதிகாரிகளின் ஆலோசனையின் பெயரில் தமது வீடுகளுக்கான கட்டுமாணப் பணிகளை கடன் பட்டும் இருந்த சொற்ப நகைகளை அடகு வைத்தும் மீதிப் பணமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்ட மக்கள் தாம் வாழ்ந்துவந்த சிறு கொட்டில்களையும் இதனால் இழந்து தற்போது கொட்டும் மழையில் நனைந்து தமது பிள்ளைகளுடன் பல்வேறு அசௌகரியங்களை எதிர்’கொண்டு வருவதாகவும் சசுட்டிக்காட்டுடியிருந்தனர்.

அத்துடன் குறித்த நிதியை வீடுகளை கட்டிச் செல்லும் படிமுறைக்கு ஏற்ப கட்டம் கட்டமாக வழங்குவதாக உறுதியளித்த துறைசார் அதிகாரிகளும் இன்று தமது நிலையை கண்டுகொள்ளாது கைவிரித்துள்ளனர் என்றும் தெரிவித்த மக்கள் நல்லாட்சி என்று சொல்லி வந்தவர்கள் அன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின் மக்களை நடு வீதியில் விட்டதை தவிர வேறெதனையும் செய்திருக்கவிஜல்லை என்றும் சுட்டிக்காட்டியதுடன் தமக்கான குறித்த வீடுகளை கட்டி முடிப்பதற்கான நிதியை பெற்று தருமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த கோரிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஊடாக பிரதமருக்கும் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிக...
மேலதிக பணம் அறவிடும் பேருந்துகளின் அனுமதி பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - ஜப்பானிய நிதிய...