சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற தவறினால் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Tuesday, December 28th, 2021

பண்டிகைக் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர், குறிப்பாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்கத் தவறினால், மற்றுமொரு கொவிட்-19 அலையினால் நாடு மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரித்துள்ளார்.

தற்போது, 600 – 700 கொரோனா தொற்றாளர்கள் மற்றும் 20 – 35 கொவிட் தொடர்பான இறப்புகள் நாளாந்தம் பதிவாகி வருவதாகவும், கிட்டத்தட்ட 350 பேர் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 ஆபத்து இன்னும் நீடிக்கிறது என்றும் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரியமாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து மக்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும், ஆகையால் ஒவ்வொரு நபரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம், ஒவ்வொருவரும் கொவிட் -19 க்கு தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறலாம் அத்துடன் பரவலைக் குறைக்க உதவலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: