விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் – எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் விவசாய அமைச்சர் உறுதி!

Sunday, August 7th, 2022

விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எரிசக்தி அமைச்சுடன் கலந்துரையாடி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நெல் அறுவடைக் காலத்திற்கு மாத்திரமன்றி எதிர்வரும் பயிர்ச்செய்கைக் காலத்திலும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும் போகத்தில் நெல்லுக்கு அதிக விலை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை அடுத்த வாரம் முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்கும்.

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்கும் போது, தனியார் துறையினர் அதிக விலை கொடுப்பார்கள் என எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சுகாதாரத்துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது – நாட்டை முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின்...
மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை - இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!
சவால்களை முறியடிக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவு அவ...