பார்வையிட வருவதை தவிருங்கள் – யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர்!

Saturday, December 2nd, 2017

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதனால் மருத்துவமனையிலுள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளுங்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

மழையின் பின்னரான சூழ்நிலைகளால் போதனா மருத்துவமனையில் மிகுந்த நெருக்கடியான நிலையில் நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கவேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் மாத்திரமே நிற்பதற்கு அனுமதிக்கப்படுவர். குழந்தைகள் பிறக்கின்ற போது மருத்துவமனைக்கு வந்து பார்வையிடுவதையும் இயன்றவரை தவிர்த்து வீடு சென்ற பின்னர் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பொதுமக்கள் நோயாளியைப் பார்க்க வரும் போது தாம் கொண்டு வரும் உணவு, உடை முதலான பொருள்களைக் கொடுத்துவிட்டு விரைவாக விடுதிகளைவிட்டு வெளியேறி மருத்துவ சேவையை வழங்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றுள்ளது.

Related posts: