வைரஸ் காய்ச்சல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு!

இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலால் கடந்த இரு தினங்களில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காலையும் கடந்த 25 ஆம் திகதி இரவும் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆறு மாதங்கள் மற்றும் ஒன்றரை வயது ஆகிய இரு குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் காரணமாக இதுவரை 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
இருதய மாற்றுச் சிகிச்சை வெற்றி
25 ஆயிரத்து 648 இளையோர் வேலை கோரி யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு விண்ணப்பம் - மாவட்டச் செயலாளர் வேதநாயக...
முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு: பல வீடுகள் சேதம்!
|
|