வைத்திய கல்லூரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும்!

Thursday, July 28th, 2016

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரசாங்கம் மூடும்வரை மாணவர்களுடன் இணைந்த தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த வைத்திய கல்லூரி மற்றும் நெவில் பெர்னான்டோ வைத்தியசாலை என்பன தேசியமயமாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரச வைத்திய அதிகாரிகளின் சங்க செயலாளர் நளின்த ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இவற்றை முற்றாக மூடுவதற்கும் அல்லது தேசியமயமாக்குவதை தவிர்த்து வேறு எந்த முடிவுக்கும் தமது சங்கமும், மாணவர் அமைப்புகளும் உடன்படப் போவதில்லை.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் சிலருடன் கல்வி அமைச்சு மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இன்று முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச வைத்தியர்கள் சிலரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தரக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: