வைத்தியசாலையில் வைத்து சிறைக் கைதி மீது தாக்குதல் -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Saturday, February 3rd, 2018

சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டவரை வைத்தியசாலையில் வைத்தே சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக குறித்த இளைஞரின் தந்தையாரால் மனிதவுரிமை ஆணைக்குழுவில் யாழ். பிராந்திய காரியாலத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஜதுர்சன் (வயது – 21) என்ற இளைஞரே காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரே இவ்வாறு இரு தடவைகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தையார் வலம்புரிக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts: