வேகக் கட்டுப்பாட்டை இனங்காண அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நடைமுறை! 

Thursday, February 8th, 2018

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் பொலிஸாருடன் இணைந்து வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களை இனங்காண அதிவேக நெடுஞ்சாலையில் புதிய நடைமுறைஅறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை  அந்த வாகனங்கள் வெளியேறும் இடங்களிலேயே வழங்குவதற்கான புதிய வேகஅளவீட்டு அமைப்பு பொருத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் போது கண்காணிப்பு நேரம், வேகம், வாகனங்களின் இலக்கங்களும் பதிவு செய்து குறித்த புகைப்படம் வழங்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும்முகாமைப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அதிவேக  நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கு 27 வீத விபத்துக்கள்  அதிக  வேகத்தால்  இடம்பெறுவதாக  அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: