வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சட்டமா அதிபரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
சி.சி.ரி.வி காட்சிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹம்பாந்தோட்டை நகர மேயர் உட்பட நான்கு பேர் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ள நிலையில், குறித்த விவகாரத்தை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த குழு தொடர்பான விபரங்கள் அண்மையில் சமூகவலைதளங்களில் காணொளி ஆதாரத்துடன் வெளியாகி இருந்தன எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வான்போக்குவரத்து பிரிவிற்கு பதக்கம்!
இரு தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் : பெப்ரவரி முதலாம் திகதி வாக்களிக்க முடியும் -கிளிநொச்சி மாவ...
தென்னிந்திய தொலைக்காட்சி நாடகம் பார்த்து பொய்யுரைத்தேன்: குற்றம் செய்த சிறுவன் பொலிஸ் விசாரணையில் த...
|
|