வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை – வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி நெசவு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு!

Monday, August 31st, 2020

வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி நெசவு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெறும் கண்காட்சி ஒன்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகமொன்றை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இவற்றுக்கான இறக்குமதி தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்துள்ளது.

அந்தவகையில் இலங்கையில் எமது தேசியத்தை அடிப்படையாக கொண்ட தேசிய வளங்களை வலுப்படுத்தி அவற்றை பாதுகாத்து எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய ஆடை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இதடினப்படையில் வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய ரீதியில் புதிய ஆடை தொழிற்சாலைகளை அதிகளவில் ஆரம்பிக்க தேவையான சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: