வெற்றி பெற்றார் கோத்தபாய: இந்தியாவுக்கு நல்லது – சுப்ரமணியன் சுவாமி!

Sunday, November 17th, 2019

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான சுப்ரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,

“ இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட நபர். இந்தியாவுக்கு நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி அமைதியாகவும் சமாதானமான முறையில் கொண்டாடுமாறு நாட்டு மக்களிடம் பொதுஜன பெரமுன கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: