வெடிப்பு சம்வம் – உடற்கூற்று பரிசோதனையின்பின் சடலத்தை கையளிக்குமாறு நீதவான் உத்தரவு!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்
கிளிநொச்சி உமையள்புரம் சேலைநகர் பகுதியில் நேற்றையதினம் வெடி பொருள் ஒன்றை வீட்டில் வைத்து கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் குறித்த சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கும் குறித்த வீட்டு வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான வெடி பொருட்களையும் பார்வையிட்டு அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுமாறும் கட்டளையிட்டுள்ளார் .
இச்சம்பவத்தின் போது 25 வயதுடைய சிவலிங்கம் யுவராஜ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|