வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் இன்று

Sunday, November 18th, 2018

வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்  இன’று அனுஷ்டிக்கப்படுகிறது.

2005ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை வீதி விபத்துக்களினால் பாதிக்கப்படுவோரின் தினமாக பிரகடனப்படுத்தியது.

மக்களின் உயிரிழப்பு மற்றும் மனிதவளம் குறைவடைவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை இந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

பொலிஸ் அறிக்கைகளுக்கு அமைவாக கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களினால் மூவாயிரத்து 153 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை எட்டாகும்.

இந்த எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள அதிக வேகம், மதுபோதையுடன் வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி வாகனத்தை செலுத்துதல், வாகன ஒழுங்கு விதிகளை கவனத்தில் கொள்ளாமை கடும் அழுத்தத்துடன் வாகனத்தை செலுத்துதல் ஆகியன வாகன விபத்துகளுக்கு காரணம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் திடீர் அனர்த்ததை தவிர்க்கும் பிரிவின் சமூக விசேட வைத்தியர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த வீதிகள், உரிய முறையில் பராமரிக்கப்படதா வாகனங்கள், பாதுகாப்பு கவசங்களை அணியாமை, வாகன ஆசன பட்டியை பயன்படுத்தாமை ஆகியனவும் விபத்துக்களுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

Related posts: