வீதியின் புனரமைப்பு பணிகளில் திருப்தி கொள்ளாத நெடுந்தீவு மக்கள் போராட்டம்!

Tuesday, August 21st, 2018

நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதியின் புனரமைப்பு பணிகளில் திருப்தி கொள்ளாத மக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேற்படி போராட்டம் இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு சந்தையில் இருந்து பொலீஸ் நிலையம் வரையிலான 300மீட்;டர் நீளம் கொண்ட குறித்த பாதை உரிய முறையில் புனரமைப்புச் செய்யப்படவில்லை.
வீதிபுனரமைப்பின் போது வீதியை அகலிக்கும் நடவடிக்கைகள் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை எனவும், எம்மை ஏமாற்றும் ஒரு ஏமாற்று வித்தையாகவே இந்த புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள மக்கள் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப குறித்த வீதி அகலிப்பு செய்யப்டாத காரணத்தினால் வாகனச் சாரதிகளும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையினால் 07 மில்லியன் ரூபா செலவுடன் குறித்த வீதி புனரமைக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டிற்காக இந்த வீதி அமைக்கப்பட்வில்லை என்பதே அந்த மக்களின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.
மக்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தமையும் இதன்போது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான குறித்த கண்டன போராட்டத்தின் நிறைவில் பிரதேச செயலர், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுனர், வடமாகாண முதலைமைச்சர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அனுப்பி வைக்கும் பொருட்டு நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளியிடம் மனு கையளிக்கப்பட்டது.

Related posts:


மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் - காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண...
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: வலி.வடக்கு தவிசாளரின் அடாவடி தொடர்பில் ஈ.பி.டி.பி
வறுமைக்கோட்டின் கீழுள்ள 37 ஆயிரத்து 500 முன்பள்ளிச் சிறார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா நிவாரணம் - ஆரம்ப...