நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை

Wednesday, April 29th, 2020

கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் நோயாளா கொள்ளளவு எண்ணிக்கை உச்சத்தை தொடும் அபாய நிலையை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுவரை ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் பௌதீக வளங்களுக்கு ஏற்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்படக்கூடிய நோயாளர்களின் உச்ச எண்ணிக்கையை எட்டியுள்ளதாக வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வருவோர் குணமடைந்து வைரஸ் தொற்று இல்லையென்று நிரூபணமாகும் வரையில் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிதாக நோயாளிகளை உள்வாங்க வேண்டுமாயின் தற்பொழுது குணமடைந்து மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளை வேறும் மருத்துவமனைகளுக்கு இடமாற்ற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கொரோனா நோய்த் தொற்று பரவுவதனை தவிர்க்கும் வகையில் மக்கள் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள  அவர்  குறிப்பாக மக்கள் பொலிஸாருக்கு அஞ்சி செயற்படாது சமூக அக்கறையுடன் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: