உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சிக் கருத்தரங்கு இடம்பெற்றது

Saturday, May 14th, 2016

உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட  கால்நடைப் பண்ணையாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (13-05-2016) உடுவில் புதுமடம் மீள் எழுச்சி அபிவிருத்திச் சங்கத்தில் இடம்பெற்றது.  PSDG திட்டத்தின் கீழ் மாகாண  சபையின் நிதியின் கீழ் இந்தப் பயிற்சிக் கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.  மேற்படி கருத்தரங்கின் முதலாவது நாள் கடந்த -6 ஆம் திகதி இணுவில் கற்பகப் பிள்ளையார் ஆலய மண்டபத்திலும் , இரண்டாவது நாள் கருத்தரங்கு கடந்த -11 ஆம் திகதி ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்திலும் இடம்பெற்றிருந்தது. மூன்று நாள் கருத்தரங்கிலும் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ். சி. விமலகுமார் , கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி- கே.ரி. பிருந்தா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்தினர்.

குறித்த கருத்தரங்கு தொடர்பில் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ். சி. விமலகுமார் கருத்துத் தெரிவிக்கையில் ,

ஒவ்வொரு கருத்தரங்கிலும் அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த 30 பண்ணையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் கால்நடைகள் தொடர்பான  விழிப்புணர்வும்,  மாடு, ஆடு, கோழிகள் என்பன வளர்ப்பது தொடர்பான முகாமைத்துவம் தொடர்பிலும் இந்தக் கருத்தரங்கில் எடுத்துக் கூறப்பட்டது . அத்துடன் காலநிலைக்கு ஏற்ற வகையில் எவ்வாறு கால்நடைகளைப் பராமரிப்பது என்பது தொடர்பிலும்  விளக்கமளிக்கப்பட்டது.  முன்னைய வருடங்களிலும் நாங்கள் இது போன்ற பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்தியுள்ளோம். இதன் மூலம் மிகவும் விழிப்புணர்வுள்ள பண்ணையாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.  தற்போதுள்ள நிலையில் எமது பகுதியில் பாலுற்பத்தி கூடுதலாகவிருப்பதால் மாடு வளர்ப்பு மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தப் பயிற்சிக் கருத்தரங்கானது மாடு வளர்ப்பாளர்கள் உட்படக் கால் நடைப் பண்ணையாளர்களுக்கு பயனுள்ளதாக வகையில் அமைந்திருந்தது என்றார்.

uduvil

uduvil 1

Related posts: