வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக ஏப்ரல்முதல் விசேட வேலைத் திட்டம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவிப்பு!
Monday, March 25th, 2024வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 முதல் வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி செயற்படும் சாரதிகளின் தகவல்கள், தரவு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தண்டப் பணம் செலுத்தும் தபால் நிலையங்கள் ஊடாக குற்றத்தின் தன்மை, குறித்த பொலிஸ் நிலையத்தின் தகவல்கள், சாரதி அனுமதிப்பத்திர தகவல்கள் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இவ்வாறு தரவு தொகுதிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருத்துவ பீடம் நாளை ஆரம்பம்!
Online Visa வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை - குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!
கொழும்பு - புறநகரில் சூரிய சக்தி படகு சேவை ஆரம்பம் - நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சே...
|
|