போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பு!

Friday, January 6th, 2023

குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கி போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு 9 கிராம் 980 மில்லிகிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சோதனைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: