வீட்டில் இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் – இராணுவத் தளபதியின் அறிவிப்பு!
Sunday, November 29th, 2020கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வீட்டிலேயே இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பல மருத்துவர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதை நிவர்த்திசெய்யும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் பெட்டா மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மற்றும் ராகம பகுதிகளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திலிருந்து நாளை அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பகுதிகளின் நிலைமை குறித்து அடுத்த புதன்கிழமை ஆராயப்படும் என்றும், அந்த பகுதிகள் தனிமையில் இருந்து விடுவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|