கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் இடம்பெறுமா? கிளிநொச்சி ஆனைவிழுந்தான் மக்கள் ஆதங்கம்!

Tuesday, May 30th, 2017

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்படாமலும் பேருந்து சேவை இல்லாத நிலையிலும் மிக நீண்டகாலமாக அக்கிராம மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த வீதியை

புனரமைத்துத் தருவதற்கான நடவடிக்கைகளை துறைசார்ந்தவர்கள் முன்னெடுக்க வேண்டுமென மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 1983 ஆம் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் தற்போது 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இக்குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றிய நிலையில் பெரும் நெருக்கடிகளுடன் வாழ்ந்துவருகின்றன. இக்கிராமம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இற்றைவரையில் இப்பகுதிக்கென பேருந்து சேவை இல்லாத காரணத்தினால் மக்கள் தமது தேவைகளுக்காக பல கிலோமீற்றர் தூரத்திற்கு நடந்தே

செல்ல வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு நாளாந்தம் முகங்கொடுத்து வருகின்றனர்.எட்டு கிலோமிற்றர் தூரத்தில் இருக்கும் அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கு செல்லவேண்டுமாயின் இக்கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் நடந்து சென்றே பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலையுள்ளதாகவும்ரூபவ் போக்குவரத்தை காரணங்காட்டி தமது கிராமத்துப் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் மாற்றலாகி வேறு பாடசாலைகளுக்குச் செல்வதினால் தமது பிள்ளைகளும் கல்வி நிலையில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் தமது ஏனைய தேவைப்பாடுகளையும்ரூபவ் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்துதருமாறு பலதரப்பட்டோரிமும் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் இதுவரையில் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் துறைசார்ந்தவர்கள் கருத்தில் கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கையெடுக்க முன்வர வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்: மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம...
கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும...
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், பல்வேறு துறைகளின் சேவை நடவடிக்கைகளை வழமை போன்று மே...